புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிக அவசியம்: நடிகை சோனாலி பிந்த்ரே வலியுறுத்தல்

மும்பை: தமிழில் ‘காதலர் தினம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் சோனாலி பிந்த்ரே. இந்தியிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், வெளிநாட்டில் சிகிச்சை பெற்று  குணமாகி மீண்டு வந்து இருக்கிறார்.     இந்நிலையில்,  மும்பையில் சிஏஎச்ஓ அமைப்பு ஏற்பாடு செய்த சர்வதேச மருத்துவ கருத்தரங்கில், சோனாலி பிந்த்ரே பேசியதாவது: புற்றுநோய் மிகவும் கொடியது; வலி வேதனையை அளிப்பது. நோயை தொடக்கத்திலேயே  கண்டறிவது மிக அவசியம். இதன் மூலம் எளிதில் மீளமுடியும்.செலவும் குறையும். வலி வேதனையும் பெரிதாக இருக்காது. முற்றிய நிலையாக இருந்தால் வேதனை மட்டுமல்ல, சிகிச்சை செலவும் மிக அதிகமாக இருக்கும்.  எனக்கு இப்படி ஒரு நோய் வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.  நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அறிந்த எனது ரசிகர்கள், பொதுமக்கள், தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.

 உடல் நலத்தில் மிகுந்த  அக்கறை செலுத்தும் நான், அப்படிப்பட்ட வாழ்க்கை முறையை கடைப்பிடித்தும் கூட இப்படி ஒரு நோய் எனக்கு எப்படி வந்தது என்று பலரும் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினர். அதன் பிறகு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட  பலரை சந்தித்து கேட்டறிந்தேன். அப்போதுதான், யாருக்கு வேண்டுமானாலும் இந்த நோய் தாக்கும் என்ற விஷயமே எனக்கு தெரிய வந்தது. புற்றுநோய் பற்றி வெளிப்படையாக விவாதம் செய்வதன் மூலம், இது குறித்த  விழிப்புணர்வு வேகமாக பரவும். அதிகமான மக்களை சென்றடையும். இந்த விஷயத்தில் சுகாதார அமைப்புகள், மருத்துவமனைகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து மிக முக்கிய பணியாற்ற வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: