ஐபிஎல் 2019; மும்பையை புரட்டியெடுத்த பட்லர்; 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி

மும்பை: மும்பையில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் டி காக், ரோகித் சர்மா ராஜஸ்தான் பந்து வீச்சை சிதறடித்தனர். இந்த ஜோடி 96 ரன்கள் எடுத்திருந்த போது ஆர்ச்சர் பந்து வீச்சில் ரோகித்சர்மா(47) ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 16, பொல்லார்டு 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இறுதியில் டி காக் 52 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரியுடன் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் பாண்டியா அதிரடியாக விளையாட மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரஹானே - பட்லர் அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி 60 ரன்கள் எடுத்திருந்த போது ரஹானே 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்த பட்லர் மும்பை அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். குறிப்பாக அல்சாரி ஜோசப் ஓவரில் 6,4,4,4,4,6 என 28 ரன்கள் ஒரே ஓவரில் அடித்து மிரட்டினார்.

அடுத்த ஓவரிலேயே பட்லர் ஆட்டமிழந்தார். அவர் 43 பந்துகளில் 7 சிக்சர், 8 பவுண்டரியுடன் 89 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து களமிறங்கிய சாம்சன் 21 ரன்களில் ஆட்டமிழக்க ஸ்மித் 12, திரிபாதி 1, லைவ்ஸ்டோன் 1 ரன்களில் ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு உருவாகியது. இறுதியில் ஸ்ரேயாஸ் கோபால் 7 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இறுதியில் 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்து மும்பை அணியை ராஜஸ்தான் அனி வீழ்த்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: