மோடி ஆட்சியில் தீவிரவாத தாக்குதல்கள் இல்லை; தேசத்தின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது..: ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம்

தேனி: மோடி ஆட்சியில் தீவிரவாத தாக்குதல்கள் இல்லை; தேசத்தின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது என்று தேனி பிரச்சார கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழகத்தில் வரும் 18ம் தேதி மக்களவைத் தேர்தலும், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர்கள், மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன், கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தேமுதிக, தமாகா, பாமக எனக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த கூட்டதில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

பிரச்சாரத்துக்காக வந்த பிரதமர் மோடியை வரவேற்ற துணை முதல்வர் ஓபிஎஸ், நினைவுச் சின்னம் வழங்கி வரவேற்றார். பின்னர் பேசிய ஓபிஎஸ், தேசத்தின் காவலனான சவுக்கிதாரை வரவேற்கிறேன். இந்தத் தேர்தல் நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான தேர்தல். ஜனநாயக குருஷேத்திரம் நடக்கிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். ஏனெனில், பிரதமர் மோடியால்தான் உலகளாவிய கம்பீரப் பார்வை இந்தியா மீது பதிவாகியிருக்கிறது. நமது பிரதமர் கம்பீர பிரதமர். அவர் சிறுபான்மையின மக்களின் உண்மையான நண்பர். மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். பாஜக-அதிமுக கூட்டணிக்கு மிகப் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. பிரதமர் மோடியின் ஆட்சியில் மதக்கலவரங்கள் இல்லை. தீவிரவாத தாக்குதல்கள் இல்லை. தேசத்தின் பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் அருளால் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும் என வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: