ஆந்திரா 80 சதவீதத்தை தாண்டும்... நள்ளிரவு வரை வாக்குப்பதிவு

ஆந்திராவில் நேற்று முன்தினம் சட்டப்பேரவைக்கும், மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இதில், பல இடங்களில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆளும் தெலுங்கு சேதம் கட்சி  தொண்டர்களுக்கும், ஜெகன் மோகன் ெரட்டி தலைமையிலான ஒஎஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் நடந்தது. இதில், 2 பேர் கொல்லப்பட்டனர். அதே நேரம், மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான  வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை. இதனால், 300க்கும் மேற்பட்ட மையங்களில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நீடித்தது.

இந்த தேர்தலில் மொத்தம் 76.69 சதவீதம் வாக்குகள்  பதிவாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது கடந்த தேர்தலை விட 1.27 சதவீதம் குறைவு. ஆனால், வாக்குப்பதிவு முழு விவரம் இன்னும் கிடைக்கவில்லை. அது, 80 சதவீதத்தை தாண்டலாம் என கருதப்படுகிறது.இது பற்றி தேர்தல்  ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், ‘எவ்வளவு சதவீதம் வாக்குகள் பதிவானது என்பது குறித்து புள்ளி விவரம் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் கூடுதலாக  வாக்குப்பதிவு ஆகியிருக்கலாம்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: