கடனை திருப்பி செலுத்தாத அனில் அம்பானி வசதியாக வாழ்கிறார்... ஆனால் விவசாயிகளை மோடி அரசு கொடுமைப்படுத்துகிறது... ராகுல்காந்தி

தேனி : தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பெரியகுளம் தொகுதி சரவணக்குமார், ஆண்டிப்பட்டி மகாராஜன்  ஆகியோரை ஆதரித்து ராகுல்காந்தி பிரச்சாரம் செய்தார். மேலும் தேனியில் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.  அப்போது பேசிய அவர்; தேர்தல் அறிக்கை தனிமனிதனின் அறிக்கை அல்ல, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாட்டு மக்களின் ஒருமித்த குரல் என்று தெரிவித்தார். விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர், இளைஞர்கள் என்று அனைவர் கருத்தையும் அறிந்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீட் தேர்வு குறித்து குறிப்பிட்டோம் என்று கூறினார். நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவெடுத்து கொள்ளலாம் என்றும் எடுத்துரைத்தார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை விளக்கி தேனியில் ராகுல்காந்தி பேசினார்.

விவசாயிகளை அவமதித்த அரசு

அனில் அம்பானி ரூ. 45,000 கோடி வங்கி கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் வசதியாக வாழந்து வருகிறார். சிறிய கடனை திருப்பி செலுத்தாத விவசாயிகளை மோடி அரசு கொடுமைப்படுத்தி அவமதிக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் வறுமையை ஒழிக்கும்

குறைந்தபட்சமான எளிமையான வரியை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விதிப்போம். காங்கிரஸ், திமுக இணைந்து தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்க முடிவு எடுத்துள்ளோம். காங்கிரசும் திமுகவும் இணைந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை ஏழைகளுக்கு வழங்கும். நாட்டில் 20% ஏழை மக்களை அடையாளம் கண்டு நிதியுதவி வழங்கப்படும். ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.72,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஏழைகளுக்கு நிதியுதவி வழங்குவது எந்த நாட்டிலும் இல்லாத புரட்சிகரமான திட்டம் என்று கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: