சவுதி சினிமா துறையில் அதிகரிக்கும் முதலீடு : ஏப்.14,15ல் சர்வதேச கண்காட்சி

துபாய்: சவுதி அரேபியா கடுமையான கட்டுப்பாடுகளும் ,சட்டங்களும் நிறைந்த நாடாகும். மன்னர் சல்மான் பொறுபேற்ற பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. இதில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி, விளையாட்டு போட்டிகளை நேரில் காண அனுமதி என மாற்றங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதி கொடுக்கப்பட்டு கடந்த 2018 ஏப்ரல் மாதம் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்ட்து.

அதோடு சவுதி அரசாங்கம் தற்போது சினிமாத்துறையில் கூடுதலாக முதலீடுகளை செய்ய முன் வந்துள்ளது. சினிமா தொடர்பான கட்டமைப்புகளை மேற்கொள்ள முதலீட்டாளர்களை கவரும் வகையில் வரும் ஏப்ரல் 14 மற்றும் 15 என இரண்டு நாட்கள் சினிமா பில்ட் கே எஸ் எ என்ற சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்காட்சி ரியாத் நகரில் நடைபெறுகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்களும் 20க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் பங்கேற்க உள்ளனர். புகழ்பெற்ற துபாய் வோக்ஸ், இந்தியாவின் கார்னிவல் சினிமாஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: