சென்னை: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழக இந்து சமய திருக்கோயில்களின் வீட்டுமனை வாடகைதாரர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக இந்து சமய திருக்கோயில்களின் வீட்டுமனை வாடகைதாரர்கள் சங்க தலைவர் லோகநாதன், பொதுச்செயலாளர் மணி ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 40 நாடாளுமன்ற மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக இந்து சமய திருக்கோயில்களின் வீட்டுமனை வாடகை தாரர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகம் வழக்கம் போல் தொடர்ந்து இக்கூட்டணி வெற்றிக்கு அனைத்து வகையிலும் உறுதுணையாய் இருப்பது என்று முடிவெடுத்து இருக்கிறது.