உ.பி. மாநிலம் அசம்கர் தொகுதியில் போட்டியிடுகிறார் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ். இவருக்கு எதிராக போட்டியிடும் பாஜ வேட்பாளர் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளார். போஜ்புரி படங்களில் நடிக்கும் முன்னணி நடிகரும் பாடகருமான தினேஷ் லால் யாதவ் என்ற நிராஹுவா தான் அகிலேஷுக்கு எதிராக பாஜ சார்பில் நிற்கிறார். 2016ம் ஆண்டு உ.பி.யின் உயரிய விருதான ‘யாஷ் பாரதி’ விருதை அப்போதைய முதல்வர் அகிலேஷ் யாதவின் கையில் இருந்து வாங்கியவர்தான் தினேஷ். ‘அகிலேஷ் ஜி பெரிய தலைவர் தான். அவரை எதிர்த்து நிற்பது தனி த்ரில். அவருக்கு கடும் போட்டியை உருவாக்குவேன்’ என்று தினேஷ் லால் யாதவ் கூறினார்.