நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட குற்றவாளி 50 கொலை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளுகிறார்: நியூசிலாந்து போலீஸ் தகவல்

நியூசிலாந்த்: நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட குற்றவாளி 50 கொலை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள இருப்பதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் தரப்பில்,  நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச்சில் உள்ள இரண்டு மசூதிகளில் தாக்குதல் நடத்திய குற்றவாளி 50 கொலை குற்றச்சாட்டுகளை எதிர் கொள்ள இருக்கிறார். மேலும் 36 பேரை கொலைச் செய்ய முயன்றதாக அவரது மீது வழக்கு பதிவு செய்யப்படுள்ளது. இந்த வழகில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். நியூஸிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ள மசூதிகளில் கடந்த மாதம் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். இதில்  50 பேர் பலியாகினர். இதில் 7 பேர் இந்தியர்கள். பலர் காயமடைந்தனர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் முக்கியக் குற்றவாளியான பிரெண்டன் டாரன்ட் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.  உலகையே  இந்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து செமி ஆட்டோமெட்டிக் துப்பாக்கி  மற்றும் ரைபில் ரக துப்பாக்கிகளை  கடுமையான துப்பாக்கிகளுக்கான விதிகளுக்கு கீழ் கொண்டு வந்து தடை செய்வதாக  நியூசிலாந்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: