கமல் கட்டுப்பாட்டில் கட்சி இல்லை டெபாசிட் கூட கிடைக்காது: நீக்கப்பட்ட நிர்வாகி சாபம்

மாவட்ட பொறுப்பாளர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மதிப்பதில்லை. கட்சி இப்போது அவரது கட்டுப்பாட்டில் இல்லை. ேதர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது என, நீக்கப்பட்ட விருதுநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் நேற்று சீனிவாசன் அளித்த பேட்டி:

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை மதிப்பதில்லை. கட்சியின் மாநில துணைத்தலைவர் மகேந்திரன், மாநில பொதுச்செயலாளர் அருணாச்சலம் ஆகியோரின் பிடியில் கமல்ஹாசன் உள்ளார். கட்சி அவரது கையில் இல்லை. மாவட்ட பொறுப்பாளர்களிடம் கடந்த 4 மாதமாக அவர் தொடர்பு கொள்ளவில்லை.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 மாவட்ட பொறுப்பாளர்கள் வெளியேறி உள்ளனர். தேர்தல் முடிவதற்குள் ஏராளமான நிர்வாகிகள் அவரது கட்சியிலிருந்து விலகுவார்கள். அவருக்காக லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்தேன். தென்மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து ரூ. 65 லட்சம் செலவு செய்து, நெல்லையில் பொதுக்கூட்டம் நடத்தினோம். இதற்காக எங்களுக்கு நன்றி, வாழ்த்து என ஒரு வார்த்தை சொல்லவில்லை. தேர்தலில் மநீம டெபாசிட் வாங்காது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: