தென்மாநிலங்களில் ராகுல் அலை ஜான்சி ராணி தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர்

தென்இந்தியாவில் முதன் முறையாக ராகுல்காந்தி போட்டியிடுவது காங்கிரஸ்காரர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. அவரது இந்த முடிவு பாஜவுக்கு தான் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை அவர்கள், தோல்வி பயத்தால் தான் ராகுல் இரண்டு தொகுதிகளில் போட்டிடுவதாக விமர்ச்சிக்கிறார்–்கள். இது கண்டிக்கத்தக்க ஒன்று. பெரிய தலைவர்கள் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது இந்தியாவை பொறுத்தவரை ஒன்றும் புதிதல்ல. அதற்கு எடுத்துக்காட்டாக பல தலைவர்கள் உள்ளனர். ஏன் கடந்த தேர்தலில் மோடியே 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.

தென் இந்திய மக்களுக்கு உண்மையிலே இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி, சோனியாகாந்தி போன்றவர்கள் மீது மிகுந்த பற்று உண்டு. அப்படி இருக்கும் போது கேரளா வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுவது பெரிய விஷயம். ராகுல் போட்டியிடுவதால், கேரளா, தமிழகம் மட்டுமல்லாது தென் மாநிலங்களில் ராகுல் அலை வீசும். மொத்தமாக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் வெற்றியை அள்ளி வரும் பாருங்கள். கண்டிப்பாக அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இது பயத்தால் அல்ல. அப்படி என்றால் இரண்டு தொகுதியில் நின்ற தலைவர்கள் எல்லாம் பயத்தில் தான் நின்றார்களா?. மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூட கடந்த தேர்தல்களில் இரண்டு தொகுதிகளில் நின்றிருக்கிறார். பாஜகவின் தோல்வி பயத்தை இது காட்டுகிறது. பாஜ தனது தோல்வி பயத்தை எப்படி வெளிக்காட்டுவது என்று தெரியாமல் இது போன்ற கீழ்த்தரமான விமர்சனங்களை முன் வைக்கிறது. பாஜ மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தை எடுத்து கொண்டால்  ‘கோ பேக் மோடி’ என்ற பட்டம் வாங்கியது பிரதமர் மோடி தான்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: