அமித்ஷா கூட்டத்துக்கு 800 வாகனங்கள் அதிகாரிகளுக்கு உத்தரவு

கோவை:  தமிழகத்தில், பா.ஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பா.ஜ தேசிய தலைவர் அமித்ஷா இன்று கோவை சிவானந்தா காலனியில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார். இதில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள்  உள்பட  முக்கிய அரசியல் கட்சியினர் பங்கேற்கின்றனர். இதற்காக கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆட்களை திரட்ட, போக்குவரத்து ஆய்வாளர்களிடம் வாகனங்களை ஏற்பாடு செய்து கொடுக்க ஆளும்கட்சியினர்  வலியுறுத்தியுள்ளனர். தொண்டர்களை அழைத்து வர  800 வாகனங்கள் தேவை, அதனை தயார் செய்ய வேண்டும் என ரகசியமாக உத்தரவிடப்பட்டுள்ளது.

திடீரென 800 வாகனங்களை எப்படி தயார் செய்வது என தெரியாமல் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் புலம்பி வருகின்றனர். தேர்தல் ஆணையம் பொது கூட்டங்களுக்கு வாகனங்களில் ஆட்களை அழைத்துவரக்கூடாது என  தெரிவித்துள்ள நிலையில், அமித்ஷா கூட்டத்தில் ஆள் சேர்க்க ஆளும்கட்சியினர் 800 வாகனங்களை தயார் செய்ய உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: