சீனாவில் பயங்கர காட்டுத்தீ 24 தீயணைப்பு வீரர்கள் பலி

பீஜிங்: சீனாவில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வீரர்களில் 24 பேர் அதில் சிக்கி, உடல் கருகி பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில், மலைப்பிரதேசமான லியாங்ஷான் யி வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.

காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவியது.  இதையடுத்து, தீயை அணைப்பதற்காக உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக 689 மீட்புப் படையினரை அனுப்பி வைத்தனர். இதனிடையே, காற்று திசைமாறி வீசியதால் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து அவர்களில் 30 பேரை  காணவில்லை. அவர்களை மீட்கும் பணிக்கு உதவியாக அவசரநிலை மேலாண்மை அமைச்சகம் அனுப்பிய குழு ஒன்றும் அங்கு சென்றுள்ளது. இந்நிலையில் அதிகாரிகளை தொடர்பு கொண்ட மீட்புப் படையினர், 24 தீயணைப்பு  வீரர்கள் காட்டுக்கு தீக்கு பலியாகி உள்ளதாக தெரிவித்தனர். இந்த தகவலை ராணுவ செய்தி நிறுவனம் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: