நேபாளத்தில் மழை வெள்ளத்துக்கு 31 பேர் பலி: 600 பேர் காயம்

காத்மண்ட்: நேபாளத்தில் பல்வேறு கிராமங்களில் நேற்று முன்தினம் மாலை பயங்கர புயலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் 31 பேர் பலியானார்கள். 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நேபாளத்தில் பாரா மற்றும் பார்சா மாவட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் மாலை பயங்கர புயல் வீசியது. சாலைகளில் சென்ற கார், பேருந்து உள்ளிட்டவற்றை இந்த புயல் புரட்டி போட்டது.  இதனுடன்  கனமழையும் பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதோடு கடும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் சிக்கின. பல இடங்களில் வீடுகள் விடிந்து சேதமடைந்தன.

மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன. பல இடங்களில் மின்கம்பங்களும் சாய்ந்தன. வெள்ளம் சூழ்ந்ததால் வீட்டில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கினார்கள். மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சம்பவங்களினால் பாரா  மாவட்டத்தில்  28 பேரும், பார்சா மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மழைவெள்ளம் சூழ்ந்த இடங்களில் ராணுவத்தினர், மீட்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: