பைலட் இல்லா விமானம் ‘ஏப்.1ல்’ எமிரேட்ஸ் அறிவிப்பு

துபாய்: ஏப்ரல் முதல் நாள் முட்டாள் தினமாக அனுசரிக்கப்படுவதால், அன்று எப்படியாவது மற்றவர்களை ஏமாற்றிவிட வேண்டும் என்று நண்பர்கள்தான் போராடுவார்கள். ஆனால், சமீபகாலமாக நிறுவனங்கள் கூட  வாடிக்கையாளர்களிடம் விளையாட ஆரம்பித்துவிட்டன.உலகளவில் புகழ்பெற்ற விமான நிறுவனங்களில் ஒன்று துபாய் எமிரேட்ஸ் விமான நிறுவனம். இந்நிறுவனம் நேற்று தனது டிவிட்டர் பதிவில் புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், ‘‘சிறிய அளவிலான ஹெலிகாப்டர்  போன்ற பயணிகள் செல்லும் தானியங்கி டிரோன் விமானத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதில் முதல் வகுப்புக்கான சொகுசு வசதிகள் இருக்கும். நவீனமாக வடிவமைக்கப்பட்ட இந்த டிரோன்கள் துபாயில் இருந்து, நகரின்  அனைத்து இடங்களுக்கும் செல்லும் வகையில் இயக்கப்படும்.

 2020 ஏப்ரலில் இது செயல்பாட்டுக்கு வர உள்ளது. அடிக்கடி எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கும் சிறப்பு உறுப்பினர் அட்டை  உள்ளவர்களுக்கும் இதில் பயணிக்க முன்னுரிமை அளிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இதுவரையில் பயணிகள் டிரோன் விமானங்கள், உலகில் எங்குமே தயாரிக்கப்படவில்லை மற்றும் சோதனை செய்யப்படவில்லை என்பதால், இது ஏப்ரல் 1ம் தேதியையொட்டிய விளையாட்டாக இருக்கலாம் என விமான  நிறுவனத்தின் டிவீட்டுக்கு கீழேயே ஆயிரக்கணக்கானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: