தென்காசி முத்தாரம்மன் கோயில்களில் இன்று பங்குனி பூக்குழி திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

தென்காசி: தென்காசி கீழ மற்றும் மேல முத்தாரம்மன் கோயில்களில் பங்குனி பூக்குழி திருவிழா இன்று காலை வெகு விமர்சையாக நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஓம்சக்தி பராசக்தி கோஷம் விண்ணை முழங்க பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கினர். தென்காசி கீழ மற்றும் மேல முத்தாரம்மன் கோயில்களில் பூக்குழித் திருவிழா கடந்த 21ம்தேதி காலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படி தீபாராதனைகள், இரவில் அம்பாள் வீதி உலா நடந்தது. கீழ முத்தாரம்மன் கோயிலில் பூக்குழித்திருவிழாவை முன்னிட்டு நேற்றிரவு ஆனைப்பாலம் சிற்றாற்றிலிருந்து பூங்கிரகம் ஊர்வலமாக எடுத்து வருதல் நடந்தது.

இன்று காலையில் பூக்குழி திருவிழா நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். தொடர்ந்து ஏப்ரல் 4ம்தேதி துலாபாரம் நிகழ்ச்சியும், 7ம்தேதியிலிருந்து 15ம்தேதி வரை ஊஞ்சல் வைபவம் நடக்கிறது. இதேபோல மேலமுத்தாரம்மன் கோயிலில் இன்று காலையில் பூக்குழி திருநாள் திரௌபதி அம்மன் திருக்காப்பூட்டு, இரவில் பூங்கிரகம் புறப்படுதல் நடந்தது. இன்று காலையில் பூக்குழி இறங்குதல் வைபவம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். ஏப்ரல் 4ம்தேதி காலையில் மஞ்சள்நீராட்டு, 5ம்தேதி பாரிவேட்டை, 6ம்தேதி முதல் 13ம்தேதி வரை அம்பாள் ஊஞ்சல் வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை அனைத்து சமுதாய பக்தர்கள், கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: