மயாமி ஓபன் டென்னிஸ் பைனலில் பெடரர்

மயாமி: அமெரிக்காவில் நடைபெறும் மயாமி ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் தகுதி பெற்றார். அரை இறுதியில் கனடாவின் இளம் வீரர் டெனிஸ் ஷபோவலாவுடன் (19 வயது, 23வது ரேங்க்) மோதிய பெடரர் (37 வயது, 5வது ரேங்க்)  6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி,  12 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.

மயாமி ஓபனில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள பெடரர், 5வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றொரு அரை இறுதியில் நடப்பு சாம்பியனான ஜான் ஐஸ்னர் (அமெரிக்கா) 7-6 (7-3), 7-6 (7-4) என்ற நேர் செட்களில் 1 மணி, 53 நிமிடம் போராடி வென்றார். இறுதிப் போட்டியில் பெடரர் - ஐஸ்னர் மோதுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: