காங்கிரசை வம்புக்கு இழுக்க சம்ஜவுதா ரயில் வழக்கை துணைக்கு அழைக்கும் பாஜ

டெல்லி  பாகிஸ்தான் இடையே இயக்கப்பட்டு வந்த சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 2007ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி பாகிஸ்தான் நோக்கி சென்று கொண்டிருந்தது. அரியானா மாநிலம் பானிபட் அருகே ரயில் வந்தபோது அதிலிருந்த இரண்டு பெட்டிகளில் குண்டு வெடித்தது. இதில், 70 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் குற்றவாளிகள் இல்லை என்று சில நாட்களுக்கு முன் பஞ்ச்குலா தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது விடுவித்தது.

மக்களவை தேர்தல் பிரசாரத்தில் காங்கிரசுக்கு எதிராக பிரயோகப்படுத்த, இந்த தீர்ப்பை பாஜ ஒரு ஆயுதமாக கையில் எடுத்துள்ளது. மத்திய நிதியமைச்சரும், பாஜ மூத்த தலைவரான அருண் ஜெட்லி டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், “சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு பலவீனமாகி போனதற்கு ஐமு கூட்டணி அரசும்,  காங்கிரசும்தான் காரணம். இந்து தீவிரவாதத்தை பரப்ப வேண்டும் என்பதற்காக ஒன்றுமறியாத அப்பாவி இந்துக்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. அப்பாவி மக்கள் உயிர் இழந்தனர். உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் செய்த இந்த செயலை ஒட்டுமொத்த இந்து சமூகமும் ஒருபோதும் மன்னிக்காது. ” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: