கடன் பாக்கியை வசூலிக்க அதிரடி மல்லையாவின் யுனைடெட் புரூவரீஸ் பங்குகள் ரூ.1,008 கோடிக்கு விற்பனை: அமலாக்கத்துறை தகவல்

புதுடெல்லி: மல்லையாவின் யுனைடெட் புரூவரீஸ் பங்குகள் ரூ.1,008 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்த்து ரூ.9,000 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது. இவற்றை வசூலிக்க வங்கிகள் போராடி வருகின்றன. இதற்கிடையில், சட்டவிரோத பண பரிவர்த்தனை மோசடி வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை, யுனைடெட் புரூவரீஸ் நிறுவனத்தில் மல்லையாவுக்கு சொந்தமான 74,04,932 பங்குகளை பறிமுதல் செய்தது. இவை எஸ் வங்கியில் உள்ளன. இந்த வழக்கை விசாரணை நடத்தி வந்த கர்நாடக உயர் நீதிமன்றம், யுனைடெட் புரூவரீசில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மல்லையாவின் பங்குகளை, பெங்களூருவில் உள்ள கடன் தீர்ப்பாயத்தில் ஒப்படைக்க சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.

மேற்கண்ட பங்குகள், எஸ் வங்கியில் கடன் வாங்க மல்லையாவால் அடமானம் வைக்கப்பட்டவை. இதை தொடர்ந்து, கடன் தீர்ப்பாய அதிகாரி மூலம் மல்லையாவின் ரூ.74,,04,932 பங்குகள் ரூ.1,008 கோடிக்கு விற்கப்பட்டுள்ளன. மல்லையாவிடம் வங்கிகள் கடன் பாக்கியை பங்கு விற்பனை மூலம் வசூல் செய்ய பிஎம்எல்ஏ நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி அறித்தது. இதற்கிடையில் கடன் தீர்ப்பாய அதிகாரி அறிவிப்பின்படி மேற்கண்ட பங்குகள் ரூ.1,008 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: