தேர்தல் செலவை கண்காணிக்க 120 தொகுதிகளுக்கு சிறப்பு அதிகாரிகள்: ஆணையம் அதிரடி

புதுடெல்லி: தமிழகம், மகாராஷ்டிராவை தொடர்ந்து மேலும் 120 தொகுதிகளுக்கு சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, தமிழகம், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மட்டும் சிறப்பு தேர்தல் செலவின அதிகாரிகள் கடந்த வாரம் நியமிக்கப்பட்டனர். இரு மாநிலத்திலும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப் பொருள் வழங்குவதற்கான அதிக வாய்ப்புள்ள தொகுதிகள் இருப்பதால் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், நாடு முழுவதும் பணப்பட்டுவாடா நடக்க வாய்ப்புள்ளதாக மேலும் 120 தொகுதிகளை தேர்தல் ஆணையம் தற்போது அடையாளம் கண்டுள்ளது. அங்கு சிறப்பு அதிகாரிகளை நியமிக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த தொகுதிகள் தெலங்கானா, ஆந்திரா, தமிழகம், அரியானா, குஜராத், பீகார், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பவையாகும். மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளின் அறிக்கைபடி, மேலும் பல தொகுதிகள் அடையாளம் காணும் பணி நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக எழும் குற்றச்சாட்டுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: