மாலியில் இனக்குழுக்களுக்கு இடையே பயங்கர மோதல் : ஒரே இடத்தில் 134 பேர் கொன்று குவிப்பு

மாலி : ஆப்ரிக்க நாடான மாலியில் ஒரே இடத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 134 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் இந்த 55 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மாலியில் டோகாண் பழங்குடியினருக்கும் ஃபுலானி இனக் குழுவினருக்கும் இடையே நீடிக்கும் மோதலின் தொடர்ச்சியாக இந்த படுகொலைகள் நிகழ்ந்துள்ளன.

அதிகாலை 4 மணி அளவில் ஃபுலானி மக்கள் வசித்து வந்த Ogossagou மற்றும் Welingara ஆகிய கிராமங்களில் சூழ்ந்து கொண்ட டோகாண் பழங்குடிகள் வீடுகளுக்குள் தீ வைத்ததுடன் தப்பி ஓடியவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.

 இந்த கொடூர தாக்குதலில் கர்ப்பிணிகள்,பெண்கள், குழந்தைகள் உட்பட 134 பேர் உயிரிழந்தனர். இரு இனக் குழுக்களும் இடையிலான மோதலை தடுக்க முடியாமல் மாலி அரசும் ராணுவ அரசும் திணறி வருகின்றனர். மாலி படுகொலைகளை உறுதிப்படுத்தியுள்ள ஐ.நா.வின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப், இது போன்ற நிகழ்வுகளை தடுக்க சர்வதேச சமூகம் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: