உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி சார்பில் வெளியிடப்பட்ட வேட்பாளர் மற்றும் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் முலாயம் சிங் யாதவ்் பெயர் ஒரு வழியாக இடம்பெற்றுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இங்கு அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாடி 37 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இரண்டு தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்காக விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமாஜ்வாடி வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் 40 பேரின் பெயர்கள் அடங்கிய நட்சத்திர பேச்சாளர் பட்டியில் நேற்று வெளியிடப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் பட்டியலை வெளியிட்டார். இந்த 2 பட்டியலிலும் கட்சியின் நிறுவன தலைவரான முலாயம் பெயர் இடம்பெறவில்லை. வேட்பாளர் பட்டியலில் அகிலேஷ் யாதவ், அசாம் கான், டிம்பிள் யாதவ் மற்றும் ஜெயாபச்சன் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.