அம்மூர் பேரூராட்சியில் சீரான குடிநீர் வழங்க பொன்னை ஆற்றில் கிணறுகள் தூர்வாரும் பணி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த பொன்னை ஆற்றில் குடிநீர் உறிஞ்சும் கிணறுகள் தூர் வாரும் பணியை அம்மூர் பேரூராட்சி செயல் அலுவலர் ரேவதி தொடங்கி வைத்தார்.ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் முதல்நிலை பேரூராட்சியில் குடிநீர் வழங்குவதற்காக கடந்த 2012ம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பொன்னை ஆற்றில் நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைக்கப்பட்டது. இதன்மூலம் பொதுமக்களுக்கு தட்டுபாடின்றி குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பருவமழை பொய்த்து போனதால் நீர்நிலைகள் வறண்டு கிடக்கிறது.

மேலும் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு போதிய அளவு குடிநீர் வழங்க முடியாமல் பேரூராட்சி நிர்வாகம் திணறி வந்தது. இதையடுத்து கலெக்டர் மற்றும் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஆகியோரின் அறிவுரையின்படி பொன்னை ஆற்றில் உள்ள குடிநீர் உறிஞ்சும் கிணறுகள் தூர்வாரும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதனை அம்மூர் முதல்நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ரேவதி தொடங்கி வைத்தார்.இந்த பணிகள் முடிந்ததும் ஆம்மூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில்  6 வார்டுகளுக்கு சீரான குடிநீர் கிடைக்கும் என செயல் அலுவலர் ரேவதி தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: