திருச்செந்தூரில் பா.ஜ. வேட்பாளர் தமிழிசை சாமி தரிசனம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாநில பா.ஜ. தலைவரும், தூத்துக்குடி பா.ஜ. வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் சத்ரு சம்ஹாரமூர்த்தி சன்னதியில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் கலந்து கொண்டார். அதன்பின்னர் அவர் அளித்த பேட்டி:தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியை எப்படி மேம்படுத்துவது? எவ்வாறு  வேலைவாய்ப்பை ஏற்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவது? என்பதை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து ஒரு தொகுப்பாக மாற்றி வருகிற 27ம் தேதி வெளியிடுகிறோம். தமிழக பா.ஜ. பொறுப்பாளர் பியூஸ் கோயல் கலந்து கொள்கிறார்.

நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்ல வேண்டும். ஊழலற்ற அரசியல் இருக்க வேண்டும். மக்களுக்கான அக்கறையோடு செயல்பட வேண்டும் என்பதே எனது குறிக்கோள். பல லட்சம் தமிழர்களை படுகொலை செய்த திமுக- காங்கிரஸ் கூட்டணி 1975ல் அவசர நிலை பிரகடனம் கொண்டு வந்து அனைவரின் கருத்து சுதந்திரத்தை நசுக்கிய காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டு கருத்து சுதந்திரத்தை பேச எந்த தார்மீக உரிமையும் கிடையாது.சோபியா பொது இடத்தில் அனைவருக்கும் இடையூறு அளிக்கும் வகையில் சத்தம் போட்டதால் தான் நாங்கள் சொன்னோம். எதிர் விமர்சனங்களை எதிர் கொள்பவள் தான் நான். வரம்பு மீறி பேசக் கூடாது என்பது நமது நாகரிகம். அதைத் தான் நாங்கள் மேற்கொள்கிறோம். இவ்வாறு தமிழிசை  சவுந்தரராஜன் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: