உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கர் மக்களவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி

லக்னோ : பாராளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி இன்று  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தில் ஒன்றான உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்தியாவின் பிரதமரைத் தேர்வு செய்வதில் இந்த மாநிலத்தின் பங்கு முக்கியமானதாகும். எனவே, தேசியக் கட்சிகளின் பிரதமர் வேட்பாளர்களாக அறியப்படுகிறவர்கள் உத்தரப்பிரதேசத்திலிருந்து போட்டியிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேச்சத்தின் இரு பெரும் பிராந்தியக் கட்சிகளான அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து போட்டியிடுகின்றன.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி; எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் நான் வெற்றிபெறுவேன் என்று எனக்கு தெரியும். பா.ஜ.கவை வீழ்த்துவதற்காக, சமாஜ்வாடி மற்றும் ஆர்.எல்.டியுடன் வலிமையான கூட்டணி அமைத்துள்ளோம். நான் ஒரு தொகுதியில் வெற்றி பெறுவதைவிட நாம் அதிக தொகுதிகளில் வெற்றிபெறுவதே முக்கியம். நம் கட்சியை வலுப்படுத்துவதற்காக, முன்னர் ஒருமுறை ராஜ்யசபா எம்.பி பதவியை நான் ராஜினாமா செய்துள்ளேன். எனவே, தற்போதுள்ள சூழ்நிலையை மனதில்கொண்டு இந்தமுறை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி இன்று  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அகிலேஷ் யாதவ் அஸம்கர் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் ராம் கோபால் யாதவ், அசம் கான், டிம்பிள் யாதவ், ஜெயா பச்சன் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். மேலும் ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் ஆசம்கர் போட்டியிடுகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: