மதுரையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.4.50 கோடி பணம் பறிமுதல்

மதுரை : மதுரையில் முறையாக ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.4.50 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் தற்போது அமலில் உள்ள நிலையில், மதுரை யானைக்கல் மேம்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.4.50 கோடி பணம் சிக்கியுள்ளது. இதுகுறித்து நடத்திய விசாரணையில் திருச்சியிலிருந்து மதுரை ஆரப்பாளையம் கனரா வங்கிக்கு எடுத்துச்செல்லப்பட்ட பணம் என்பது தெரியவந்துள்ளது. சோதனையில் சிக்கிய பணம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறையினர், மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் சென்னையில் யானைக்கவுனி பகுதியில் 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், லோகேஷ் என்பவர் காரில் கொண்டு வரப்பட்ட தங்க நகைகள், தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே பகுதியில் நடத்திய மற்றொரு சோதனையில் 30 லட்சம் பணம், 1.700 கிலோ தங்கமும், 30 கிலோ வெள்ளி விளக்குகள், பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பூக்கடை பகுதியில் நடத்திய சோதனையில் 3 கிலோ வெள்ளி கட்டிகள், 6 கிலோ வெள்ளி பழைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி பொருட்கள் தண்டையார்பேட்டையில் உள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் நாச்சியார்பேட்டையில் காரில் கொண்டு சென்ற ரூ.68 லட்சம் மதிப்பு நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் நகைகளை காரில் கொண்டு சென்ற முருகன் என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: