கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு இந்திய மக்கள் மகிழ்ச்சியாக இல்லை : ஐ.நா., ஆய்வில் தகவல்

டெல்லி : உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நாவின் சார்பு நிறுவனம் மகிழ்ச்சிகரமான நாடுகள் குறித்து ஆய்வு நடத்தியது. தனி நபர் வருமானம், ஆரோக்கிய வாழ்வின் அத்தியாவசிய தேவைகள், சமூக சுதந்திரம், ஊழலின்மை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு 156 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆய்வு குறித்து வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியா 140வது இடத்தை பிடித்துள்ளது. பின்லாந்து முதல் இடத்தையும், டென்மார்க் இரண்டாவது இடத்தையும், நார்வே மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவுக்கு 19வது இடம் கிடைத்துள்ளது.

உலக மகிழ்ச்சி தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலை ஐ.நா வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு இந்திய மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று கூறப்பட்டுள்ளது. கடந்தாண்டு 133வது இடத்தில் இருந்த இந்தியா, 7 இடங்கள் சரிந்து 140வது இடத்திற்கு சென்றுள்ளது. பாகிஸ்தான் 67 வது இடத்திலும், சீனா 93 வது இடத்திலும் உள்ளன. மகிழ்ச்சி குறைந்த நாடாக தெற்கு சூடான் உள்ளது. மேலும் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான் அதிகம் வாக்களிக்க வருவார்கள் என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: