எங்க கொடி மேல ஏன் கை வைக்கறீங்க? : விவசாயிகள், வியாபாரிகள் கொதிப்பு

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினரும் தங்கள் கொடிகளை அகற்ற வேண்டுமென தேர்தல் பறக்கும்படை உத்தரவு போட்டுள்ளது. மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் சாயம் கொண்ட விவசாய சங்கத்தினர் ஏற்கனவே தேர்தலை முன்னிட்டு தங்கள் கட்சி கொடிக்கம்பங்களை அகற்றி விட்டனர். ஆனால் அரசியல் சாராத விவசாய சங்கங்களின் கொடிகளையும் அகற்ற போட்ட உத்தரவு பலரையும் எரிச்சல் அடைய வைத்துள்ளது. ‘நாங்கள் எந்தவொரு தேர்தலிலும், எந்தவொரு கட்சிக்கும் ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ பணியாற்றியது இல்லை. விவசாயிகள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஓட்டுப் போடவே வலியுறுத்தி வருகிறோம். இதற்கு முன்பு நடந்த தேர்தல்களிலும் எங்கள் சங்க கொடிகள் அகற்றப்பட்டதில்லை. எங்கள் சங்க கொடியில் பச்சை, வெள்ளை சின்னங்கள் எந்த அரசியல் கட்சியையும், அமைப்பையும் சார்ந்ததில்லை. இது அறியாமல் ெகாடிகளை அகற்ற சொல்வது சரியல்ல’  என்றனர் விவசாய சங்கத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: