பங்குனி உத்திர திருவிழா : காவடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் மிகவும் பழமையான சுப்ரமணியசுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா வரும் 21ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கடந்த வாரம் கோயில் முன் பந்தகால் நடப்பட்டு தினந்தோறும் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனைகள் நடைபெற்று வருகிறது.

பங்குனி உத்திர திருவிழாவின் போது உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து தங்கள் வேண்டுதல் நிறைவேற வழிபாடுகள் செய்வர். இதற்காக கோயில் முன் கடந்த இரண்டு நாட்களாக காவடி தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான 5 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோயில் விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: