கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

சென்னை: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று இரவு காலாமானார். அவருக்கு வயது 63 ஆகும். இவரது மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  டிவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல்: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுச் செய்தி கேட்டு வேதனையடைந்தேன். திமுக சார்பில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரது கட்சியினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.  

அதேபோல தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். சிறந்த ஆட்சியாளராகவும் கடின உழைப்பாளியாகவும் அனைவரிடமும் அன்புடன் பழகும் பண்பு கொண்டவர் பாரிக்கர் என புகழாரம் சூட்டினார். மனோகர் பாரிக்கர் மறைவு கோவா மாநிலத்திற்கு பேரிழப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: