ஜெனிவா நகரில் துவங்கியுள்ள சர்வதேச மோட்டார் ஷோவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 4 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார், டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல், புதிய மினி எஸ்யூவி மாடல் மற்றும் புதிய மின்சார காரின் கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்தியுள்ளது. டாடா நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார், முதலில் பெட்ரோல், டீசல் மாடலில் வர இருக்கிறது.