கொடைக்கானலில் தொடரும் காட்டுத்தீ

கொடைக்கானல்: ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த மாதம் கடும் உறைபனி நிலவி வந்த நிலையில் தற்போது வெயில் கொளுத்தி எடுக்கிறது. மேலும், தனியார் தோட்டங்களில் பற்ற வைக்கும் தீ மற்றும் மர்ம நபர்கள் வீசி விட்டு செல்லும் சிகரெட், வெயிலின் தாக்கத்தால் கொடைக்கானலில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக காட்டுத்தீ பரவி வருகிறது.

கொடைக்கானல் பகுதியில் உள்ள பெரும்பள்ளம், வடகவுஞ்சி, பொய்யாவழி உள்ளிட்ட வனப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு காட்டுத்தீ பரவியது. மேலும், தேவதானப்பட்டி வனச்சரகத்தில் தலையாறு அருவி உள்ளிட்ட பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் வனத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காட்டுத்தீயால் அரிய வகையை சேர்ந்த பலநூறு மரங்கள், செடி, கொடிகள் எரிந்து நாசமாகி வருகின்றன. இதனால் வெப்பம் தாளாமல் விலங்குகள் நகர் பகுதிகளுக்கு புகும் அபாயம் உள்ளது.மேலும், கொடைக்கானல் நகர் பகுதிக்கு அருகே உள்ள பெருமாள்மலை வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் நகர் பகுதியில் உள்ள ஒரு சில இடங்கள் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: