பா.ஜனதாவுடன் கூட்டணியால் சிவசேனாவுக்குத்தான் கூடுதல் பலன்: ஆய்வில் தகவல்

மும்பை: மகாராஷ்டிராவில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதால் சிவசேனாதான் கூடுதல் பலனடையும் என்று ஆய்வில் தெரியவந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் சிவசேனா தனது தேர்தல் உத்திகளை வகுக்கவும், ஆலோசனைகளை வழங்கவும் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோரை நியமித்துள்ளது. இவரது குழுவினர் சிவசேனா போட்டியிடவிருக்கும் 23 தொகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து அறிக்கையை உத்தவ் தாக்கரேயிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கைப்படி பார்த்தால் முந்தைய தேர்தலை விட நடைபெறவிருக்கும் தேர்தலில் சிவசேனா கூடுதல் இடங்களில் வெற்றிபெற வாய்ப்பிருப்பதாக தெரியவந்திருப்பதாக சிவசேனா மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இதுபற்றி சிவசேனா நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘பிரஷாந்த் கிஷோர் குழுவினர் 23 தொகுதிகளில் நடத்திய ஆய்வில் மக்களை எவ்வாறெல்லாம் எளிமையான முறையில் அணுகி அவர்களது வாக்குகளை கவரமுடியும் என்பது பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. முந்தையை தேர்தலை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவே அந்த ஆய்வறிக்கையில் இருந்து தெரியவருகிறது’’ என்றார். ஏற்கனவே ஒரு முறை சிவசேனா இதே போன்ற ஒரு ஆய்வை நடத்தியது. அதில் தனித்து போட்டியிட்டால் பல இடங்களில் தோல்வியடைய நேரிடும் என்றும் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் 18 தொகுதிகளில் சிவசேனாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரியவந்தது.  அதைத் தொடர்ந்தே பா.ஜனதாவுடன் சிவசேனா கூட்டணிமுடிவுக்கு வந்ததாக  கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: