அம்பத்தூர்: அம்பத்தூர் ரவுடி கொலையில் 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை ஓட்டேரி சேமாத்தம்மன் கோயில் 3வது தெருவை சேர்ந்த சத்யா (எ) செங்குட்டுவன் (39), பிரபல ரவுடி. இவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் அம்பத்தூர் ரயில்வே கேட் அருகில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 பேர், சத்யாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்து வந்த அம்பத்தூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரை சார்ந்த நாகராஜ் (37), ராஜ்குமார் (35), பெரம்பூர் பிரகாஷ் அவன்யூவை சேர்ந்த நிஜாமுதீன் (35) ஆகியோர் சத்யாவை கொலை செய்தது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவர்கள் 3 பேரையும் நேற்று மதியம் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறியதாவது:
கொலை செய்யப்பட்ட சத்யாவின் அண்ணன் ஆடலரசு, கடந்த 2004ம் ஆண்டு ஐ.சி.எப் காவல் நிலைய பகுதியில் குடும்ப பிரச்னை காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகராஜ், ராஜ்குமார், நிஜாமுதீன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். அப்போது, சத்யா தனது அண்ணனை ெகான்ற நாகராஜ், ராஜ்குமார், நிஜாமுதீன் ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த மூவரும், சத்யாவை விட்டுவைத்தால் தங்களது உயிருக்கு ஆபத்து என கருதி, திட்டமிட்டு அவரை வெட்டிக் ெகான்றுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீசார், இந்த வழக்கில் வேறு நபர்கள் யாருக்கும் தொடர்பு உண்டா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி