மக்கள் கேள்விக்கு மிரளும் அமைச்சர்: பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு எஸ்கேப்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கடந்த 2 நாட்களுக்கு முன் நாட்றம்பள்ளி தாலுகா வெலக்கல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட செட்டேரி டேம், குனிச்சியூர், மம்தாபுரம் பகுதிகளில் வாக்கு சேகரிக்க திட்டமிட்டிருந்தாராம். ஆனால் திடீரென தேர்தல் பிரசாரத்தை தவிர்த்து அமைச்சர் திரும்பிவிட்டதால், எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். இதுகுறித்து அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் கூறுகையில், ‘‘எங்க பகுதியில் உள்ள செட்டேரி டேம் தண்ணீரின்றி வறண்டு 10 ஆண்டுகளாகிறது. இதனால நதிநீர் இணைப்பு கொண்டுவரணும்னு அமைச்சர் கிட்ட பலமுறை சொல்லிட்டோம். அவரு நடவடிக்கை எடுக்காம எங்கள அலைக்கழிச்சுவிட்டார். எங்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்குவதாகவும் சொல்லியிருந்தார். ஆனா இப்பவும் நாங்க குடிநீருக்கு கஷ்டப்பட்டுக்கிட்டுதான் இருக்கோம். இப்போ ஓட்டு கேட்டு வர்றதா கேள்விப்பட்டு காத்திருந்தோம். ஆனா அவரு எங்க வந்தாரு? நாங்க கேள்வி கேட்கப்போறோம்னு யாரோ சொல்லியிருக்காங்க. அதனால அவரு அப்படியே போயிட்டாரு’’ என்றனர்….

The post மக்கள் கேள்விக்கு மிரளும் அமைச்சர்: பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு எஸ்கேப் appeared first on Dinakaran.

Related Stories: