பெட்டி பெட்டியா போகுதா...பிடி தண்ணி...பிரியாணி...போடு ‘தடா’: பறக்கும்படைக்கு டென்ஷன்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக சரக்கு வாங்கினால் அவற்றை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என்று பறக்கும்படையினருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க முக்கிய தலைவர்கள் வந்தால் தொண்டர்களுக்கு கிடா விருந்து, மது விருந்து நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதற்காக டாஸ்மாக் கடைகளில் அரசியல் கட்சியினர் குவிந்துவிடுகின்றனர். இதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதாவது தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் தினந்தோறும் விற்பனையாகும் சரக்கு குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். ஒவ்வொரு கடையிலும் இதற்கு முன்பு எவ்வளவு சரக்கு விற்பனையானது? தற்போது எவ்வளவு விற்பனையாகிறது? என்பது குறித்து தினமும் அறிக்கை தாக்கல் செய்ய ஒவ்வொரு மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  

அதன்படி வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் நிலவரம் குறித்து காலையில் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒருவர் தனது தேவைக்கு மேல் அதிகமான மது பாட்டில்களை வாங்கிச் செல்வது தெரியவந்தால், அதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும். இதேபோல் அதிக மது பாட்டில் வாங்கிச் செல்பவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவர்கள் அரசியல் கட்சி நிகழ்ச்சிகளுக்கு கொண்டு சென்றால் அவற்றை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பறக்கும்படைக்கு தான் டென்ஷன்; பல மாவட்டங்களிலும் கண்ணில் விளக்ெகண்ணெய் விட்டு கண்காணிக்க துவங்கி விட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: