ஜெயங்கொண்டம் அருகே காட்டாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கல்வி சீர்

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே உள்ள காட்டாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவி கண்ணகி முன்னிலை வகித்தார். விழாவில் கிராம பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிக்கு தேவையான ரூ.1 லட்சம் மதிப்புள்ள உபகரணங்களான புரஜக்டர், ஒலி பெருக்கி சாதனம், பீரோ, மின்விசிறி, டேபிள், சேர் சுவர் கடிகாரம், அரசியல் தலைவர்களின் படங்களை ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்து வந்தனர்.

அப்போது சீர்வரிசை எடுத்து வந்தவர்களுக்கு மாணவர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் பள்ளிக்கு அளித்த கல்வி சீர்வரிசைகளை பெற்று கொண்டு ஆண்டிமடம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சங்கர் பாராட்டி பேசினார். பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி, ஆசிரியர்கள் ஜெயசித்ரா, சுதா, காந்தி, ஆரோக்கியமேரி, ராபர்ட், விஜயா, கொளஞ்சி பங்கேற்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: