பேசுவது எல்லாம் இந்தியாவ பத்தி போட்டிருப்பது ‘மேட் இன் சீனா’: மோடி பற்றி ராகுல் கருத்து

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் பூத் பணியாளர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் ரபேல் விவகாரம், வேலைவாய்ப்பின்மை, நாட்டின் பாதுகாப்பு, விவசாயிகள் பிரச்னை ஆகியவை பற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மகாத்மா காந்தியின் இந்தியா வேண்டுமா அல்லது கோட்சேயின் இந்தியா வேண்டுமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஒரு புறம் அன்பு, சகோதாரத்துவம் ஆகியவை உள்ளது. மறுபுறம் வெறுப்பு, அச்சம் உள்ளது. காந்தி எதற்கும் பயப்படாதவர். அவர் பல ஆண்டுகள் சிறையில் இருந்தார். ஆனால் ஆங்கிலேயர்களிடம் அன்புடன் பேசினார்.

ஆனால் சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி தன்னை விடுவிக்கும்படி கூறினார். மேக் இன் இந்தியா பற்றி மோடி தொடர்ந்து பேசுகிறார். ஆனால், அவரது சட்டை, ஷூ, செல்போன் ஆகியவை எல்லாம் சீனாவில் தயாரானவை. புல்வாமா தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேரை கொன்ற ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சிறையில் இருந்து விடுவித்தது பாஜ. நாங்கள் யாருக்கும் அடிபணியமாட்டோம். டெல்லியில் பூத் பணியாளர்கள் கடினமாக உழைத்து 7 தொகுதிகளிலும் வெற்றி பெற வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: