பிரான்ஸ் பிரதிநிதியை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிட்ட உள்துறை அமைச்சகத்திற்கு கண்டனம்

தஞ்சை : தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரான்ஸ் நாட்டின் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதியை 48 மணிநேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிட்டதற்கு உலக தமிழர் பேரமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. 6 மாத கால சுற்றுலா விசாவில் இந்தியா வந்திருக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதியும் அரசியல் விமர்சகருமான அந்தோனிருசேல் தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு சென்றார்.

அவர் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன் பேரில் அயல்நாட்டு வருகைப் பதிவு அலுவலரும் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலருமான மகேஸ்வரன் அவரை வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார். இதனையடுத்து கார் மூலமாக புதுச்சேரி மாநிலத்திற்கு புறப்பட்ட அந்தோனிருசேல் அங்கிருக்கக் கூடிய தூதரகத்தில் முறையிட திட்டமிட்டு உள்ளார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: