குட்கா வழக்கு நிலுவையில் உள்ளதால் டி.ஜி.பி. ராஜேந்திரனை மாற்றக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு

மதுரை: டி.ஜி.பி. ராஜேந்திரனுக்கு பதிலாக வேறு ஒருவரை டி.ஜி.பி.யாக நியமிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைகிளையில் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் முறையிட்டுள்ளார். குட்கா முறைகேடு புகாரில் சிக்கியவர் டிஜிபி ராஜேந்திரன் என்றும், 2 ஆண்டுகளாக பணி நீடிப்பில் உள்ளார் என்று வழக்கறிஞர் கண்ணன் முறையீட்டார். மேலும் தேர்தலின் போது ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே ராஜேந்திரன் செயல்பட வாய்ப்புள்ளதாகவும், அதிமுகவுக்கு எதிராக தேர்தல் விதிமீறல் புகார் வந்தால் நடுநிலையாக விசாரிக்கமாட்டார் என்று தெரிவித்தார். இதற்கு நீதிபதிகள் மனுவாக தாக்கல் செய்தால் நாளையே விசாரிப்பதாக நிதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தமிழகத்தின் டி.ஜி.பி.யாக டி.கே.ராஜேந்திரன் தற்போது பணியில் உள்ளார். இவருடைய பணிக்காலம் முடிந்து தற்போது பணி நீட்டிப்பில் இவர் 2 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறார். இதனிடையே டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மீது குட்கா வழக்கு மற்றும் பல்வேறு வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தற்போது மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தொடர்ந்து பணியில் நீடித்தால் முறையாக தேர்தல் விதிமுறை மீறல்களை விசாரிக்க மாட்டார் என்று வழக்கறிஞர் கண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீட்டார். இதற்கு நீதிபதிகள் இது தொடர்பான விரிவான மனு தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என்று தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: