மாசி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்

வத்திராயிருப்பு: மாசி அமாவாசையை முன்னிட்டு, வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் இன்று நடந்த சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிவுக்கு தலா 3 நாட்களும், பிரதோஷத்திற்கு 1 நாள் என பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இடைப்பட்ட நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. பிரதோஷம், மகாசிவராத்திரி, மாசி அமாவாசையை முன்னிட்டு கடந்த 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று மாசி அமாவாசையை முன்னிட்டு மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கோவை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு திரண்டனர். காலை 6 மணியளவில் வனத்துறை கேட் திறந்து விடப்பட்டது. வனத்துறையினரின் சோதனைக்கு பின்னர், பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அமாவாசையை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சிவராம சூரியன் செய்திருந்தார். விழாவை முன்னிட்டு மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கோயிலுக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: