மகா சிவராத்திரிக்கு கல்லா கட்டியவர்களுக்கு ‘செக்’மன்னார்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் நள்ளிரவில் ‘ரெய்டு’

* முக்கிய ஆவணங்கள், கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

* சுவர் ஏறிக்குதித்து தலைத்தெறிக்க புரோக்கர்கள் ஓட்டம்

மன்னார்குடி: மகா சிவராத்திரை முன்னிட்டு, மன்னார்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கல்லா கட்டியவர்களை சுற்றிவளைத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நள்ளிரவில் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள், கட்டுக்கட்டாக ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகாரிகளை கண்டதும் புரோக்கரக்ள் சுவர் ஏறிக்குதித்து தலைத்தெறிக்க ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பந்தலடி பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு சார் பதிவாளராக திருவாரூரை சேர்ந்த பாரதி மோகன் (பொ) பணியாற்றி வருகிறார். இங்கு பத்திரப்பதிவில் முறைகேடு நடப்பதாகவும், லஞ்சம் பெறப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இந்த அலுவலகத்தில் ஒரு நாளைக்கு 5 முதல் 10 பத்திரப்பதிவு நடக்கும். இந்த பத்திரப்பதிவு காலை 10 மணிக்கு துவங்கி பிற்பகல் 3 மணிக்கு முடிந்து விடும். மாலை 6 மணிக்கு அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்று விடுவார்கள்.

நேற்று மகா சிவராத்திரி என்பதால், 50க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவு நடந்தது. இரவு 9.30 மணியை தாண்டியும் பத்திரப்பதிவு நடந்து கொண்டிருந்தது. இந்த தகவலறிந்த தஞ்சை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணவாளன் தலைமையில் திருவாரூர் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் இமயவரம்பன், தமிழ் செல்வி மற்றும் போலீசார் இரவு 9.30 மணியளவில் திடீரென சார் பதிவாளர் அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது, சார் பதிவாளர் பாரதி மோகன், 2 பெண் ஊழியர்கள், 3 ஆண் ஊழியர்கள், 3 புரோக்கர்கள் அலுவலகத்துக்குள் இருந்தனர். போலீசாரை கண்டதும் புரோக்கர்கள் பின்பக்கமாக சுவர் ஏறிக்குதித்து தலைத்தெறிக்க ஓடினர். பின்னர், போலீசார் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இரவு 9 மணிக்கு பிறகும் பத்திரப்பதிவு செய்வது ஏன் என்று சரமாரி கேள்விகளை எழுப்பினர். இன்று அதிகாலை 2 மணிக்கு சோதனையை முடித்துக்கொண்டு போலீசார் கிளம்பினர். அப்போது, முக்கிய ஆவணங்கள், கணினி பதிவுகள், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இந்து பதிவுகள், ₹70,000 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து எடுத்துச்சென்றனர். சார் பதிவாளர் அலுவலகத்தில் நள்ளிரவு நடந்த இந்த சோதனை பரபரப்மகா சிவராத்திரிக்கு கல்லா கட்டியவர்களுக்கு ‘செக்’மன்னார்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் நள்ளிரவில் ‘ரெய்டு’

* முக்கிய ஆவணங்கள், கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

* சுவர் ஏறிக்குதித்து தலைத்தெறிக்க புரோக்கர்கள் ஓட்டம்

மன்னார்குடி: மகா சிவராத்திரை முன்னிட்டு, மன்னார்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கல்லா கட்டியவர்களை சுற்றிவளைத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நள்ளிரவில் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள், கட்டுக்கட்டாக ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகாரிகளை கண்டதும் புரோக்கரக்ள் சுவர் ஏறிக்குதித்து தலைத்தெறிக்க ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பந்தலடி பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு சார் பதிவாளராக திருவாரூரை சேர்ந்த பாரதி மோகன் (பொ) பணியாற்றி வருகிறார். இங்கு பத்திரப்பதிவில் முறைகேடு நடப்பதாகவும், லஞ்சம் பெறப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இந்த அலுவலகத்தில் ஒரு நாளைக்கு 5 முதல் 10 பத்திரப்பதிவு நடக்கும். இந்த பத்திரப்பதிவு காலை 10 மணிக்கு துவங்கி பிற்பகல் 3 மணிக்கு முடிந்து விடும். மாலை 6 மணிக்கு அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்று விடுவார்கள்.

நேற்று மகா சிவராத்திரி என்பதால், 50க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவு நடந்தது. இரவு 9.30 மணியை தாண்டியும் பத்திரப்பதிவு நடந்து கொண்டிருந்தது. இந்த தகவலறிந்த தஞ்சை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணவாளன் தலைமையில் திருவாரூர் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் இமயவரம்பன், தமிழ் செல்வி மற்றும் போலீசார் இரவு 9.30 மணியளவில் திடீரென சார் பதிவாளர் அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது, சார் பதிவாளர் பாரதி மோகன், 2 பெண் ஊழியர்கள், 3 ஆண் ஊழியர்கள், 3 புரோக்கர்கள் அலுவலகத்துக்குள் இருந்தனர். போலீசாரை கண்டதும் புரோக்கர்கள் பின்பக்கமாக சுவர் ஏறிக்குதித்து தலைத்தெறிக்க ஓடினர். பின்னர், போலீசார் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இரவு 9 மணிக்கு பிறகும் பத்திரப்பதிவு செய்வது ஏன் என்று சரமாரி கேள்விகளை எழுப்பினர். இன்று அதிகாலை 2 மணிக்கு சோதனையை முடித்துக்கொண்டு போலீசார் கிளம்பினர். அப்போது, முக்கிய ஆவணங்கள், கணினி பதிவுகள், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இந்து பதிவுகள், ₹70,000 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து எடுத்துச்சென்றனர். சார் பதிவாளர் அலுவலகத்தில் நள்ளிரவு நடந்த இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: