எதிர்க்கட்சிகளுக்கு மோடி ‘அட்வைஸ்’ கொஞ்சமாவது சென்சோட பேசுங்க

ஜாம்நகர்: ‘‘ரபேல் பற்றி நான் கூறிய கருத்தை திரித்து கூறுபவர்கள், பொது அறிவை பயன்படுத்த வேண்டும்’’ என பிரதமர் மோடி கூறியுள்ளார். குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில் குரு கோவிந்த் சிங் மருத்துவமனை மற்றும் இதர வளர்ச்சி பணி திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: தீவிரவாத நோய்க்கான வேர் நமது அண்டை நாட்டில் உள்ளது. அதை வேரிலேயே அழிக்க வேண்டும். இந்தியாவை அழிக்க திட்டமிடுபவர்கள், நாட்டிற்கு வெளியே இருந்தாலும், இந்தியா அமைதியாக உட்கார்ந்திருக்காது.  

ரபேல் விமானம் சரியான நேரத்தில் வாங்கப்பட்டிருந்தால், அது கடந்த 27ம் தேதி தாக்குதலில் வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று கூறினேன். ஆனால், விமானப்படை தாக்குதல் குறித்து மோடியே சந்தேகம் எழுப்புகிறார் என எதிர்க்கட்சி தலைவர்கள் கூறுகின்றனர். அவர்கள் தயவு செய்து பொது அறிவை பயன்படுத்த வேண்டும். நான் சொன்னது என்னவென்றால், சரியான நேரத்தில் நாம் ரபேல் போர் விமானம் வாங்கியிருந்தால், நமது எந்த விமானமும் சுடப்பட்டிருக்காது, பாகிஸ்தானின் எந்த விமானமும் தப்பியிருக்க முடியாது என்ற அர்த்தத்தில்தான் கூறினேன். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: