விளைநிலங்களில் உயர்மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: கால்நடைகளுடன் விவசாயிகள் நூதன போராட்டம்

நாமக்கல்: விளைநிலங்களில் உயர்மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமாரபாளையம் அருகே விவசாயிகள் 2 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கால்நடைகளுடன் வந்து அவர்கள் நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த படைவீடு எனும் பகுதியில் உள்ள மக்கள், விவசாய நிலங்களில் அமைக்கப்படும் உயர்மின் கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முதல் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டத்தையும், உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். இவர்கள், விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதைவட கம்பிகள் அமைக்க வலியுறுத்தியும் கடந்த மாதம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

பின்னர் போராட்டத்தை கைவிட்ட மக்கள் பேச்சு வார்த்தை மூலம் சுமூக தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் எந்தவித முடிவும் எட்டப்படாததால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் மீண்டும் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் 2ம் நாளாக நடந்து வரும் இந்த போராட்டத்தில் கால்நடைகளை வைத்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் தற்போது 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் இவர்கள் நடத்தும் இந்த போராட்டத்திற்கு 13க்கும் மேற்பட்ட கிராமங்களும், பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது. உயர்மின்கோபுரம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் இந்த காத்திருப்பு போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: