கொடியேற்றத்துடன் மண்டைக்காடு கோயில் மாசிக்கொடை விழா

குளச்சல்:  குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோயில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு மாசிக்கொடை விழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக, நேற்று காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30-க்கு உஷ பூஜை ஆகியவை நடந்தது. 8 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், விஜயகுமார் எம்.பி. மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில், சாயரட்சை பூஜை, ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பூஜையும், 9 ஆயிரம் திருவிளக்கு பூஜையும் நடந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: