உற்பத்தி குறைவால் ஏறுமுகத்தில் ஏலக்காய் விலை: விவசாயிகள் கவலை

போடி: தமிழக, கேரள எல்லையில் ஏராளமான ஏலத்தோட்டங்கள் உள்ளன. குறிப்பாக, இடுக்கி மாவட்டத்தில் இரண்டரை லட்சம் ஏக்கரில் ஏல விவசாயம் நடைபெறுகிறது. இங்கு  சாகுபடி செய்யப்படும் ஏலக்காய் மொத்தமாக இடுக்கி மாவட்டத்தில் உள்ள புத்தடி ஏல  மையத்திலும், தமிழ்நாடு  தேனி மாவட்டம்  ஸ்பைஸஸ் மையங்களிலும் ஏலம் விடப்படுகிறது. மொத்த விலையில் ஏலக்காய் கிலோ ரூ1,500 ஆகவும்,  7 மற்றும் 8 பெருவட்டு ஏலக்காய் உச்சவிலையாக கிலோ ரூ1,790 முதல் ரூ1,800க்கும் மேலாக ஏறியுள்ளது.குளிரும், பனியும், வெயிலும் என பருவநிலை மாற்றத்தால் ஏலக்செடிகளில் பூக்கள், பிஞ்சுகள் கருகுவதால், உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏலத்தோட்டப்பகுதிகளில் மழையில்லாமல் கடும் வறட்சி நிலவுவதால் ஏலக்காய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏலக்காய்க்கு நல்ல விலை கிடைக்கும் நேரத்தில், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வெளிநாடுகளுக்கு ஏலக்காய் ஏற்றுமதிக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏலக்காய் விலை ஏறுமுகமாகவே உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: