தகவல் கொடுத்தால் 7 கோடி பரிசு: ஒசாமா பின்லேடன் மகனையும் முடித்து விட அமெரிக்கா முடிவு

வாஷிங்டன்: ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அல் கொய்தா  இயக்கத்துக்கு தலைவனாக முயற்சிக்கும் அவருடைய மகன் ஹம்சா பின்லேடனின் தலைக்கு அமெரிக்கா  7 கோடி பரிசு அறிவித்துள்ளது.உலக நாடுகளை மிரள வைத்த அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடன். அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரம்,  வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஆகியவற்றின் மீது இந்த அமைப்பின் தீவிரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இரட்டை கோபுர தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஒசாமா பின்லேடனை கொல்ல அமெரிக்கா பல வகைகளில் முயற்சித்தது. ஆனால், அவனுக்கு கேடயமாக பாகிஸ்தான் செயல்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க அதிரடிப்படை மின்னல் தாக்குதல் நடத்தி கொன்றது.

பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு, அல் கொய்தா இயக்கத்தின் தலைவராகும் முயற்சியில் அவருடைய மகன் ஹம்சா பின்லேடன் ஈடுபட்டுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக ஆடியோ, வீடியோ மூலமாக அல் கொய்தா தீவிரவாதிகளுடன் பேசி வருகிறார். அதில், பின்லேடனை கொன்றதற்காக அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தும்படி வலியுறுத்தி வருகிறார். இவர் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், அவரையும் ‘முடித்து விட’ அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்காக, அவரைப் பற்றி தகவல் அளிப்போருக்கு 7 கோடி பரிசு அறிவித்துள்ளது. ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் உள்ள எல்லையிலோ அல்லது மலைப் பகுதிகளிலோ ஹம்சா பின்ேலடன் பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த பகுதிகளை அமெரிக்காவின் உளவுத்துறை ரகசியமாக கண்காணித்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: