இஸ்லாமிய நாடுகள் மாநாட்டில் பங்கேற்பதில் பெருமிதம்; சுஷ்மா : இந்தியா பங்கேற்றதால் பாகிஸ்தான் புறக்கணிப்பு

அபுதாபி: அபுதாபியில் நடைபெற்று வரும் இஸ்லாமிய நாடுகள் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டு பேசினார். மாநாட்டில் பேசிய அவர் இஸ்லாமிய நாடுகள் அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதில் இந்தியா பெருமை கொள்வதாக தெரிவித்தார். இந்தியா முதல் முறையாக இஸ்லாமிய நாடுகள் மாநாட்டில் பங்கேற்கிறது. இஸ்லாமிய நாடுகளுடன் இந்தியாவுக்கு நெருங்கிய உறவு உள்ளதாகவும், இந்திய பொருட்களின் முக்கிய சந்தையாக வளைகுடா நாடுகள் திகழ்வதாக தெரிவித்தார்.

இந்தியா தனது எரிசக்தி தேவைக்கு வளைகுடா நாடுகளை சார்ந்துள்ளதாக தெரிவித்த சுஷ்மா, இந்திய வளர்ச்சியோடு வளைகுடா நாடுகள் உடனான அரசியல் உறவும் வளர்ந்து வருவதாக பேசினார். உலகின் பொருளாதார வல்லசுகளான ஆசிய நாடுகள் வளர்ச்சி பெற்று வருவதாகவும் இஸ்லாமிய நாடுகள் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசினார்.

சர்வதேச அளவில் பயங்கரவாதமும், அதற்கு பலியாவோர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்று சுஷ்மா வேதனை தெரிவித்தார். மேலும் பயங்கரவாதத்தால் சீர்குலைவதுடன் உலகத்தையும் பெரும் ஆபத்தில் தள்ளியுள்ளதாக தெரிவித்தார். தெற்காசியாவில் தீவிரவாதம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் சுஷ்மா குற்றம் சாட்டினார்.

பாகிஸ்தான் புறக்கணிப்பு

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்கிறார். துபாயில் நடைபெறும் மாநாட்டில் கௌரவ விருந்தினராக பங்கேற்க இந்தியாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்க உள்ளதால் பாகிஸ்தான் பங்கேற்காது என தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: