தாம்பரம்-நெல்லை இடையே இயக்கப்படும் அந்தியோதயா ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: தாம்பரம்-திருநெல்வேலி இடையே இயக்கப்படும் அந்தியோதயா ரயில், நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணள் ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம், தாம்பரம்- திருநெல்வேலி தினசரி அந்தியோதயா விரைவு ரயிலை (வ.எண்.16191, 16192) நாகர்கோவில் விரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்பேரில் ரயில்வே அமைச்சகம் கோரிக்கையை ஏற்று அந்தியோதயா ரயில் நீட்டிப்பு ெசய்துள்ளது.

அதன்படி தற்போது மாலை 5.15 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, மதுரை, விருதுநகர் வழியாக மறுநாள் மதியம் ஒரு மணிக்கு திருநெல்வேலி வந்து கொண்டிருந்த இந்த ரயில், நாகர்கோவிலில் இருந்து மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.  மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில், இரவு 11 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.45 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும். இதற்கான துவக்க நிகழ்ச்சி விரைவில் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: