வெளிநாட்டிற்கு கடத்துவதற்காக குடோனில் பதுக்கிய 7 கோடி மதிப்பிலான கடல்வாழ் உயிரினங்கள் பறிமுதல்: இருவரிடம் விசாரணை

பெரம்பூர்: சென்னை மண்ணடி குடோனில் பதுக்கிய 7 கோடி மதிப்பிலான அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மண்ணடியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் கடல் அட்டைகள், கடல் குதிரைகள், எறும்புத்திண்ணி போன்ற அரிய வகை உயிரினங்களை வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள்  நேற்று காலை தனியார் குடோனில் அதிரடி சோதனை நடத்தி  மொத்தம் 660 கிலோ எடையுள்ள அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் எறும்புத்திண்ணிகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் சர்வதேச மதிப்பு 7 கோடி ஆகும்.

விசாரணையில் இவற்றை சென்னை காசிமேடு, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் இருந்து மும்பை வழியாக சீனா மற்றும்  தெற்காசிய நாடுகளுக்கு கடத்த திட்டம் தீட்டியது தெரியவந்தது. எனவே குடோனில் இருந்த 2 பேரையும் கைது செய்து சுங்கத்துறையினர் தமிழக வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த அரிய வகை உயிரினங்கள் சீன பாரம்பரிய மருத்துவ பயன்பாட்டுக்காக  சட்ட விரோதமாக கடத்தப்படுவதாக சுங்கதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிடிபட்ட 2 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: